சிங்கப்பூர், அக்டோபர்.06-
சிங்கப்பூர் F1 கார் பந்தயத்தில் மெர்சடிஸ் குழுவைச் சேர்ந்த ஜோர்ஜ் ரசல் வாகை சூடினார். அவர் உலக வெற்றியாளரான ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டெபனைப் பின்னுக்குத் தள்ளினார். இப்பருவத்தில் ரசல் பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி அதுவாகும். அதே சமயம் அவர் F1 போட்டியில் ஐந்தாவது கிராண்ட் ஃபிரீ வெற்றியையும் ஈட்டியுள்ளார்.
இவ்வேளையில் மூன்றாவது இடத்தை மேக்லரனின் லண்டோ நோரிஸ் பிடித்தார். ஏழு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள ஃபெர்ரார்ரி குழுவின் லெவிஸ் ஹெமில்டன் எட்டாவதாக வந்தார்.