கோலாலம்பூர், டிசம்பர்.19-
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்று வரும் 33-ஆவது சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியக் குழு, 221 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு வெளியே நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில், மலேசியா வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன் 2007-ல் தாய்லாந்தின் Korat நகரில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற 216 பதக்கங்களே சாதனையாக இருந்தது.
பதக்கப் பட்டியலில் இன்று மாலை நிலவரப்படி மலேசியா இதுவரை 54 தங்கம், 55 வெள்ளி மற்றும் 112 வெண்கலம் என மொத்தம் 221 பதக்கங்களை வென்றுள்ளது.
இப்போட்டித் தொடங்குவதற்கு முன் மலேசியா நிர்ணயித்திருந்த 200 பதக்கங்கள் என்ற இலக்கை மலேசிய வீரர்கள் வெற்றிகரமாகத் தாண்டி சாதனைப் படைத்துள்ளனர்.








