ஜகார்த்தா, ஜூலை.30-
23 வயதுக்குக் கீழ்பட்டோருக்கான ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியில் வியட்னாம் அணி வாகை சூடியது. அவ்வணி அக்கிண்ணத்தைத் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாட்டத்தில் வியட்னாம், உபசரணை நாடான இந்தோனேசியாவுடன் மோதியது.
அவ்வாட்டம் 1க்கு 0 என வியட்னாமுக்குச் சாதகமாக அமைந்தது. அவ்வணியின் நுயேன் காங் புவாங் ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் அந்த வெற்றி கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டத்தில் இந்தோனேசியா, வியட்னாமுக்கு ஈடு கொடுத்து விளையாடி வெற்றி பெறப் போராடியது. எனினும் அவ்வெண்ணம் ஈடேறவில்லை.