கோலாலம்பூர், நவம்பர்.27-
தாங்கள் தேடி வந்த நபருக்கு பதிலாக விளையாட்டுத்துறை செய்தியாளர் ஹரேஷ் டியோலைச் சந்தேகப் பேர்வழிகள் தவறுதலாகத் தாக்கியிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
சந்தேகப் பேர்வழியின் மனைவிக்குத் தொல்லைக் கொடுத்து வந்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட நபரைத் தாக்குவதற்கு இரண்டு நபர்கள் வந்து இருக்கக்கூடும். ஆனால், அவர்கள் இலக்குத் தவறி, அந்த விளையாட்டுத்தறை செய்தியாளரைத் தாக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக டத்தோ ஃபாடில் குறிப்பிட்டார்.
எனினும் பிடிபட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் வாக்குமூலங்களும் தற்போது ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








