Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பெர்லி-தீனா ஒப்பந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்
விளையாட்டு

பெர்லி-தீனா ஒப்பந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.13-

தேசிய மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி தான்-எம்.தீனாவின் ஒப்பந்தம் மீதானச் சிக்கல்களை உடனடியாகத் தீர்ர்குமாறு மலேசியப் பூப்பந்து சங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்கிய போட்டிகளுக்குத் தயாராகி வரும் விளையாட்டாளர்களுக்கு இது மிக அவசியம் என பிஏஎம் தலைவர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்தார்.

பெர்லி தான்-எம்.தீனா இணைக்கும் பிஏஎம்மிற்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த நீட்டிப்புக்கான பேச்சு வார்த்தை இன்னும் முன்னேற்றகரமான உடன்பாட்டை எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் தொடரும் நிலையில், உலகின் நான்காம் நிலை ஜோடியான பெர்லி தான்-எம்.தீனா கடந்த மாதம் தாய்லாந்து போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News