இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன்
ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.