கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
நாட்டின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் ஜஸ்டின் ஹோ, மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் தோல்வி கண்டார். உலகத் தர வரிசையில் 45 ஆவது இடத்தில் இருக்கும் ஜஸ்டின், முதல் செட்டில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தோனேசிய வீரர் அல்வி ஃபர்ஹானிடம் அவர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. அல்வி, 54 நிமிடங்களில் 21-15, 21-5 என்ற நேரடி செட்டில் வெற்றி பெற்றார்.
இந்தத் தோல்வியின் மூலம் ஜஸ்டின் உலகப் பூப்பந்து சம்மேளனத் தொடரில் தனது முதல் பட்டத்தை வெல்வதன் மூலம் தனிப்பட்ட வரலாற்றை உருவாக்கும் சிறந்த வாய்ப்பை இழந்தார். ஆனால் முதல் முறையாக சூப்பர் 300 போட்டியின் இறுதியாட்டத்தை எட்டிய அவரது சாதனை இதுவரையிலான அவரது சிறந்த அடைவு நிலையாகக் கருதப்படுகிறது.
வெற்றியாளரான அல்வி US$27,750 (RM118,688) ரொக்கப் பரிசைப் பெற்றார். இரண்டாம் இடத்தை வென்ற ஜஸ்டின், US$14,060 (RM60,135) பரிசுத் தொகையைப் பெற்றார்.