ஈப்போ, நவம்பர்.17-
நாட்டின் இளையோர்களுக்கான தேசிய தலைமை ஹாக்கி பயிற்றுநர் கே. ராஜன் காலமானார். அவருக்கு வயது 68. இன்று காலையில் ஈப்போ, தாமான் பின்ஜி மேவாவில் உள்ள அவரின் வீட்டின் அறையில் விழுந்த நிலையில் இறந்து கிடந்ததை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ராஜனுக்கு 17 மற்றும் 13 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்று பேரா மாநில ஹாக்கி சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் சயுதி அப்துல் சமாட் தெரிவித்தார்.
ராஜனைத் தமக்கு 15 வயது முதல் தெரியும் என்று குறிப்பிட்ட டத்தோ முகமட் சயுதி, இருவரும் இணைந்து பேரா மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல ஹாக்கிப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.








