லண்டன், செப்டம்பர்.06-
2025 லண்டன் கிளாசிக் குவாஷ் போட்டியில் தேசிய வீரர் ங் ஐன் யோவ் ஆடவர் பிரிவின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் அவர் இங்கிலாந்தின் மார்வான் எல்ஷோர்பேகிவுடன் மோதினார். உபசரணை நாட்டு விளையாட்டாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இறுதியில் ஐன் யோவ் வாகை சூடினார். அரையிறுதி ஆட்டத்தில் அவர் நியூசிலாந்து போட்டியாளர் பால் கோலைச் சந்திக்கவிருக்கிறார்.
மகளிர் பிரிவில் தேசியத் தாரகை எஸ். சிவசங்கரியும் அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் உபசரணை நாட்டு வீராங்கனையை வெற்றி கொண்டார். அவர் மிகச் சுலபமாக 20தே நிமிடங்களில் வெற்றியைத் தன்வசமாக்கினார். அரையிறுதியில் சிவசங்கரி, எகிப்தின் அமீனா ஒர்ஃபிவுடன் களம் காணவிருக்கிறார்.