இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.