Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சர்வதேச கிரிக்கட்டில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள முக்கிய ஆட்டங்கள்
விளையாட்டு

சர்வதேச கிரிக்கட்டில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள முக்கிய ஆட்டங்கள்

Share:

சுற்றுலா பங்களாதேஷ் ஆடவர் அணிக்கும் இந்திய கிரிக்கட் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு20 ஆட்டம் இன்றைய தினம், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில். நூளைய ஆட்டம் பங்களாதேஷுக்குமுக்கிய ஆட்டமாக கருதப்படுகிறது.

இதில் பங்களாதேஷ் தோற்றால், 20க்கு20 தொடர் வெற்றியை அந்த அணி இழக்கவேண்டியிருக்கும்.

பங்களாதேஷ் அணி

எனவே இன்ற பங்களாதேஷ் அணியின் திறமைக்கு சவாலான ஆட்டத்தை காணக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மகளிருக்கான சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 20க்கு20 உலகக் கிண்ணப்போட்டிகளில் இன்றைய தினம், இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது.

இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி, தாம் பங்கேற்ற 2 ஆட்டங்களில் ஒன்றில் தோல்வி கண்டுள்ளது.

எனவே நாளைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஆட்டமாக அமையும்.

இதேவேளை நேற்று அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறமை குறிப்பிடத்தக்கது.

Related News