32 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற ஜூலை 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. போட்டி தொடங்க இன்னும் 40 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.
இதுவரை 10 லட்சத்து 3 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த 2019-ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.