Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அல் நாசரில் நீடிக்கிறார் ரொனால்டோ
விளையாட்டு

அல் நாசரில் நீடிக்கிறார் ரொனால்டோ

Share:

ரியாத், ஜூன்.27-

பிரபல கால்பந்து நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் கிளப்பில் நீடிக்கிறார். அத்தகவலை அக்கிளப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அல் நாசரில் நீடிப்பது குறித்து ரொனால்டோ கூறுவது போன்ற காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.

அப்புதிய ஒப்பந்தத்தின் வாயிலாக ரொனால்டோ அல் நாசரில் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறார். அவர் அக்கிளப்பில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். அன்று தொடங்கி அவர் அக்கிளப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். லீக்கில் அதிக கோலடித்த வீரராகத் திகழ்ந்தாலும், ரொனால்டோ அல் நாசருடன் எந்த பெரிய கிண்ணத்தையும் இதுவரை வெல்லவில்லை. 42 வயதான ரொனால்டோ தொடர்ந்து அக்கிளப்பில் விளையாடும் பட்சத்தில், அவர் புதிய சாதனைகளைப் படைக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

Related News