மெக்சிகோ, நவம்பர்.11-
மெக்சிகோ 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்குத் தயாராக் வருகிறது. 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கின்றன. மெக்சிகோவில் 13க்கும் அதிகமான ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
அடுத்தாண்டு ஜூன் 11 ஆம் தேதி மெக்சிகோ தலைநகரில் தொடக்க விழா நடைபெறுகிறது. ஜூலை 19 ஆம் தேதி இறுதியாட்டம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு மெக்சிகோ சிறந்த வகையில் தயாராகி வருகிறது. குறிப்பிட்ட தவணைக்குள் அனைத்து உள்கட்டமைப்புப் பணிகளும் நிறைவடைந்து விடும் என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார். 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன.








