ஹாங்காங், டிசம்பர்.02-
தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி ஹாங்காங் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இரண்டாவது சுற்றில் அவர் பிரான்ஸின் மெலிசா அல்வேஸை மூன்று செட்களில் தோற்கடித்தார்.
காலிறுதியில் சிவசங்கரி எகிப்து வீராங்கனை ஹானியா எல் ஹம்மாமியைச் சந்திக்கிறார். அவ்வாட்டம் அவருக்குச் சவால்மிக்கதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இரண்டாம் சுற்றில் ஹானியா, வேல்ஸ் வீராங்கனையைத் தோற்கடித்து காலிறுதிக்குத் நுழைந்தார்.








