கோல திரங்கானு, அக்டோபர்.04-
மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில், திரங்கானி எஃப்சி, 4-1 என்ற கோல் கணக்கில் கிளந்தான் எஃப்சியைத் தோற்கடித்தது. அதன் வழி ஏழு ஆட்டங்களுக்குப் பிறகு, திரங்கானு 13 மொத்தப் புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
முற்பாதி ஆட்டத்தில் திரங்கானு மூன்று கோல்களை புகுத்தியது. பிற்பாதியில் கிளந்தானின் தி. சரவணன் அவ்வணிக்கான ஒரே கோலைப் போட்டார். 72 ஆவது நிமிடத்தில் திரங்கானு மேலும் ஒரு கோலை அடித்து வெற்றியைத் தன்வசம் ஆக்கியது. இவ்வேளையில் கிளந்தான் எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.