Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய ஓபன்: ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த பிளின்கோவா
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன்: ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த பிளின்கோவா

Share:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம்

வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.

இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.

இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Related News