இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.