கவுகாத்தி, அக்டோபர்.30-
மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறியது. அரையிறுதியில் 125 ரன் வித்தியாசத்தில் அது இங்கிலாந்தை வீழ்த்தியது.
அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற அவ்வாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-புருன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா வாகை சூடியது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதன்முறையாக உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், அது 3 முறை (2000, 2017, 2022) அரையிறுதி வரை சென்றிருந்தது. ஒட்டு மொத்த உலகக் கிண்ண அரங்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. 2023, 2024ல் 'டி-20' உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்குள் அது நுழைந்தது.








