பாரிஸ், ஆகஸ்ட்.30-
அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடி சாதனை படைத்துள்ளனர்.
அடிடாஸ் அரங்கில் 68 நிமிடங்கள் நடைபெற்ற நீண்ட அரையிறுதி மோதலில், உலக இரண்டாம் நிலை ஜோடியான பெர்லி டான்-எம். தீனா, நிதானமாகவும் தன்னம்பிக்கையுடனும் விளையாடி, ஜப்பானின் உலக மூன்றாம் நிலை ஜோடியான நமி மட்சுயாமா-சிஹாரு ஷிடாவை 14-21, 21-13, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, உலக அரங்கில் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.