கோலாலம்பூர், அக்டோபர்.26-
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் வாயிலாக ஃபிஃபா-ஆசியான் கிண்ணம் என்ற பெயரில் புதிய கால்பந்து போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதோடு வட்டாரக் கால்பந்து வளர்ச்சியை வலுப்படுத்துவது இப்போட்டியின் தலையாய நோக்கமாகும்.
அனைத்து 11 ஆசியான் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இப்போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வட்டார கால்பந்து தரத்தை உயர்த்த உதவும். அதே சமயம் அதன் ஆட்டக்காரர்கள் அனைத்துலக அளவில் போட்டியிடும் வாய்ப்புகளைப் பெற உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கால்பந்து போட்டி, ஃபிஃபா மற்றும் ஆசியான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.








