கோலாலம்பூர், நவம்பர்.13-
ஷாங்ஹாயில் நடைபெற்ற சீன பொது ஸ்குவாஷ் போட்டியில் நடப்பு வெற்றியாளரான நாட்டின் ரேச்சல் ஆர்னால்ட் தோல்வி கண்டார். காலிறுதியில் அவர் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியிடம் வீழ்ந்தார்.
அதனை அடுத்து சீன பொது ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்தாண்டு ரேச்சல் எகிப்தின் ஃபரிடா முகமட்டை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இவ்வேளையில், அரையிறுதியில் ஹனியா, ஜப்பானிய வீராங்கனையுடன் களம் காண்கிறார்.








