Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியாவும் பாகிஸ்தானும் சமநிலை
விளையாட்டு

ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியாவும் பாகிஸ்தானும் சமநிலை

Share:

கோலாலம்பூர், ஜூன்.16-

2025 ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மலேசியாவும் பாகிஸ்தானும் 3க்கு 3 என சமநிலை கண்டன. அவ்வாட்டத்தில் வெற்றி பெறும் வேட்கையோடு மலேசியா களமிறங்கியது. எனினும் அக்கனவு நனவாகவில்லை.

அவ்விரு அணிகளும் பி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு கோல்களுடன் முன்னிலை வகித்தது. 49 ஆவது நிமிடத்தில் இருந்து விறுவிறுப்பைக் கூட்டிய மலேசியா, இரு கோல்களைப் போட்டு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

ஆட்டம் 2க்கு 2 என சமநிலையில் இருந்த சமயம், 52 ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து பாகிஸ்தான் மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. எனினும் அதற்கு ஈடு கொடுத்து விளையாடிய மலேசிய அணி 56 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை 3க்கு 3 என சமநிலையாக்கியது.

Related News