ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் "பாக்சிங் டே" டெஸ்டாக நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (38), கவாஜா (42) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.