இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 56 பந்தில் 100 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.