கோலாலம்பூர், ஜனவரி.04-
2026 ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மலேசிய அணியி, மொத்தம் 55 தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கம்போடியாவில் நடைபெற்ற போட்டியில் மலேசியா நிர்ணயித்திருந்த 50 தங்கப் பதக்கங்களை விட இது ஐந்து பதக்கங்கள் அதிகமாகும்.
சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பின்னரே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக பாரா தேசியக் குழுவின் தலைவர் முஹமட் ஸர்ராவி ரவி அப்துல்லா தெரிவித்தார். சில தொழில்நுட்பச் சவால்கள் இருந்தாலும், அதனைச் சமாளித்து விட முடியும் என அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
நீச்சல், தளகடம் போன்ற பிரிவுகளில் தங்கப் பதக்கம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி மலேசியக் குழு தாய்லாந்து புறப்படுகிறது. தாய்லாந்து பாரா விளையாட்டுப் போட்டி ஜனவரி 20 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.








