ஷென்சென், செப்டம்பர்.17-
நாட்டின் கலப்பு இரட்டையர்களான சென் தாங் ஜீ- தோ ஈ வெய் 2025 சீனா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதலாம் சுற்றில் அவர்கள் அமெரிக்க ஜோடியைச் சந்தித்தனர். அதில் நேரடி செட்களில் அமெரிக்க விளையாட்டாளர்களைத் தோற்கடித்தது மலேசிய இணை எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றியைப் பதிவு செய்ய அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் 31 நிமிடங்களாகும்.
நாளை இரண்டாம் சுற்றில் தேசிய ஜோடி, இந்தோனேசிய இணையை எதிர்கொள்கிறது. அண்மையில் நடந்து முடிந்த பாரிஸ் உலகப் பூப்பந்து போட்டியில் தாங் ஜீ- ஈ வெய் இணை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.








