15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து சார்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து.