கோலாலம்பூர், டிசம்பர்.04-
தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய பூப்பந்து சங்கம் நான்கு தங்கப் பதக்கங்களுக்குக் குறி வைத்துள்ளது. நடப்பு தர வரிசை மற்றும் அடைவுநிலையின் அடிப்படையில் அந்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக பிஏஎம் தெரிவித்தது.
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவின் அரோன் சியா-சோ வுய் யிக், மகளிர் இரட்டையர்களான பெர்லி டான்-எம்.தீனா, கலப்பு இரட்டையர் பிரிவைச் சேர்ந்த சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.
இவர்களுடன் மேலும் சில சிறந்த ஆட்டக்காரர்கள் களமிறங்கவிருப்பதால், நான்கு தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாக பிஏஎம் நம்பிக்கை தெரிவித்தது. தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டி இம்மாதம் 9 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.








