Dec 14, 2025
Thisaigal NewsYouTube
இலங்கை வரும் இந்திய அணி! தீவிரமடையவுள்ள விளையாட்டு களம்
விளையாட்டு

இலங்கை வரும் இந்திய அணி! தீவிரமடையவுள்ள விளையாட்டு களம்

Share:

இலங்கை,ஜூலை 12-

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருபதுக்கு 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு வரவுள்ளது.

ஒருநாள் போட்டிகள்

எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரும் இந்திய அணி, மூன்று இருபதுக்கு 20 ஓவர் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இந்த தொடர்களில் முதலாவதாக இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 26, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளன.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மதியம் 2:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யார் அணி தலைவர்?

முதன்மை வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் ஹர்திக் பாண்டியா 'டி-20' அணிக்கு தலைவராக நியமிக்கப்படலாம்.

இதேவேளை ஒருநாள் போட்டிக்கான அணிக்கு லோகேஷ் ராகுல் தலைவராக அறிவிக்கப்படலாம்.

Related News