நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.
இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.