பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச், நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்சை சந்தித்தார்.
தனது அனுபவத்தின் மூலம் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அல்காரஸ்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 23 நிமிடம் நீடித்தது. பிரெஞ்சு ஓபனை 2 முறை வென்று இருக்கும் ஜோகோவிச் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.