மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஜோடி பிரான்ஸின்
லூகாஸ் கோர்வீ- ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 21-11, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் 10-1 என இந்திய ஜோடி முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் பிரான்ஸ் ஜோடி புள்ளிகளை தொடர்ந்து பெற்றதால் 14-11 என முன்னிலை இடைவெளி குறைந்தது.