Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காவி தொப்பிக்கு நோ சொன்ன அஸ்வின்
விளையாட்டு

காவி தொப்பிக்கு நோ சொன்ன அஸ்வின்

Share:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் காவி நிறத்தில் இருந்தன.

தொப்பியும் காவி நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

இது தமிழகத்தில் காவிக்கு இடமில்லை என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related News