Oct 19, 2025
Thisaigal NewsYouTube
விளையாட்டு

ஓர்லின்ஸ் பொது பூப்பந்து போட்டி: காலிறுதிக்கு முன்னேறினார் லீ ஸீ ஜியா

Share:

கோலாலம்பூர், மார்ச். 07-

நாட்டின் ஒற்றையர் பிரிவு வீரர் லீ ஸீ ஜியா ஓர்லின்ஸ் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் அவர் இந்தியாவின் ஶ்ரீகாந்த் கிடாம்பியை நேரடி செட்களில் வீழ்த்தினார். உலகின் ஏழாம் நிலை விளையாட்டாளரான ஸீ ஜியா, உலகின் அந்த முன்னாள் முதல் நிலை வீரரைத் தோற்கடிக்க எடுத்துக் கொண்ட நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

ஸீ ஜியா காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்தின் Nhat Nguyenனைச் சந்திக்கிறார். அவரை இரண்டாம் சுற்றில் எதிர்கொண்ட ஜப்பானிய வீரர் யூஷி தனகா காயம் காரணமாக விலகியதால், Nhat Nguyen காலிறுதிக்கு முன்னேறினார்.


இவ்வேளையில் தேசிய கலப்பு இரட்டையர் பிரிவின் ஹூ பாங் ரான்-செங் சூ யின் ஜோடி தைவானின் லு மிங் சே-ஹங் என் ட்சு ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் கோட்டை விட்ட தேசிய இணை, ​​அடுத்த இரண்டு செட்களை 21-13, 21-16 என வென்று வெற்றியைக் கைப்பற்றியது. காலிறுதியில் மலேசிய ஜோடி, இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகின் 10-ம் நிலை ஜோடியான ரெஹான் குஷார்ஜந்தோ-குளோரியா விட்ஜாஜாவை பாங் ரோன்-சு யின் சந்திக்கப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Related News