20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.
அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.
சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர்.