கோலாலம்பூர், நவம்பர்.28-
விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓர் ஆடவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
37 வயது ஆர். கிருஷ்ணன் என்ற அந்த ஆடவர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கோலாலம்பூர், பங்சார், ஜாலான் தெலாவி 3 இல் தஞ்சோங் பாலாய் குருப் வர்த்தகத் தளத்தில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஓர் ஆடவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு விதிக்க வகை செய்யயும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் கிருஷ்ணன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் Maqrisqa Khalizan முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட கிருஷ்ணன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது. அதுவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க கிருஷ்ணனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








