இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.
இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.