Nov 3, 2025
Thisaigal NewsYouTube
டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த Roblox தயார் - அமைச்சர் ஹான்னா இயோ தகவல்!
விளையாட்டு

டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த Roblox தயார் - அமைச்சர் ஹான்னா இயோ தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

ஏஐ AI தொழில்நுட்பம் மற்றும் மனித கண்காணிப்பு மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக Roblox உறுதியளித்துள்ளது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாகத் தரவுப் பகிர்வு மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்குவதில், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற Roblox தனது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இணைய விளையாட்டுத் தளமான Roblox-ஐ பயன்படுத்தும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அந்நிறுவனத்திடம் தாம் கவலை தெரிவித்ததாகவும் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார்.

விளையாட்டிற்காக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையின் குணநலன்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்க்கவும் டிஜிட்டல் உலகத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் தனது முகநூல் பக்கத்தில் ஹான்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.

Related News