பேங்காக், டிசம்பர்.16-
தாய்லாந்து சீ விளையாட்டில் கலந்து கொண்டுள்ள மலேசியா, ஆடவருக்கான கால்பந்து போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. அரையிறுதியில் 23 வயதுக்குக் கீழ்பட்டோருக்கான தேசிய அணி, உபசரணை நாடான தாய்லாந்துடன் களமிறங்கியது. இறுதியில் அது சுழியத்திற்கு 1 என்ற கோல்களில் தோல்வியுற்றது.
கிட்டதட்ட 50,000 பேர் கொண்ட அரங்கில் சொந்த ரசிகர்கள் முன் களமிறங்கிய தாய்லாதின் வெற்றி கோல் எட்டாவது நிமிடத்தில் போடப்பட்டது. ஆட்டத்தின் போது தேசிய வீரர் முகமட் ஐமான் யூசோஃப் முகமட் நபில் மஞ்சள் அட்டை பெற்றதால் தேசிய அணி பத்து பேருடன் விளையாட நேரிட்டது.
ஆட்டம் முடிவடையும் வரை வேறெந்த கோலும் போடப்படாததால், தாய்லாந்து வெற்றியாளரானது. அது இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது. மலேசியா, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிலிப்பின்ஸுடன் மோதவிருக்கிறது.








