Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிறந்த முடிவே முக்கியம் என்கிறார் எம். தீனா
விளையாட்டு

சிறந்த முடிவே முக்கியம் என்கிறார் எம். தீனா

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

தேசிய மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனை எம். தீனா, இரண்டு என்பது வெறும் எண் மட்டுமே எனக் கூறியிருக்கிறார். தமது சகாவான பெர்லி டானுடன் உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நிலைக்கு முன்னேறியிருந்தாலும், கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் முழுத் திறனை வெளிப்படுத்தவும் சிறந்த முடிவுகளைப் பதிவு செய்வதும்தான் தமது குறிக்கோள் என எம். தீனா தெரிவித்தார். இதனிடையே உலக வெற்றியாளர் போட்டிக்கு சிறந்த வகையில் தாங்கள் தயாராகி வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளும் சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். உலக வெற்றியாளர் போட்டி இம்மாதம் 25 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை பாரிஸில் நடைபெறுகிறது.

அண்மையில் உலகப் பூப்பந்து சம்மேளனம் பிடபல்யுஃஎப் (BWF) வெளியிட்ட புதிய உலகத் தர வரிசையில், பெர்லி டான்-எம். தீனா மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related News