Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இப்பருவத்திற்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றது லிவர்பூல்
விளையாட்டு

இப்பருவத்திற்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றது லிவர்பூல்

Share:

இங்கிலாந்து, மே.26-

லிவர்பூல் இப்பருவத்திற்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வாகை சூடியுள்ளது. அவ்வணி 20 ஆவது முறையாக அப்பட்டத்தை வென்றுள்ளது. கிரிஸ்டல் பேலஸுடன் மோதிய லிவர்பூல், 1க்கு 1 என சமநிலை கண்டது. அதன் வழி இப்பருவத்தில் அதிக மொத்தப் புள்ளிகளை ஈட்டி லிவர்பூல் வெற்றியாளரானது. அதனால் அவ்வணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு 19 ஆவது முறையாகக் கிண்ணத்தை வென்ற போது, கோவிட் பெருந்தொற்று காரணமாக லிவர்பூலால் கொண்டாத்தில் ஈடுபட முடியவில்லை. இன்று லிவர்பூல் தனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அதன் ரசிகர்கள் அன்ஃபீல்டு அரங்கிலும் வீதிகளிலும் வான வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related News