Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிகேடிடிஎஸ் ஏற்பாட்டில் ஃபுட்சால் போட்டி சிறப்பாக நடைபெற்றது
விளையாட்டு

பிகேடிடிஎஸ் ஏற்பாட்டில் ஃபுட்சால் போட்டி சிறப்பாக நடைபெற்றது

Share:

கோம்பாக், ஜூலை.10-

பிகேடிடிஎஸ் எனப்படும் பெர்துபுஹான் கெபங்கிதான் தீகா தாஙான் - சிலாங்கூர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஃபுட்சால் போட்டி, எஸ்எல்கே, ஸ்போர்ட் சென்டர், பத்து மூடா, கோம்பாக்கில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பிகேடிடிஎஸ் இயக்கத்தின் தலைவரும், பிகேஆர் கோம்பாக் தொகுதியின் செயற்குழு உறுப்பினருமான எஸ். மாரான் தலைமையில் நடைபெற்ற இந்த ஃபுட்சால் போட்டியில் அதிகமானக் குழுக்கள் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர்.

முதல் பரிசு மூவாயிரம் ரிங்கிட் மற்றும் பதக்கங்கள், இரண்டாவது பரிசு 2 ஆயிரம் ரிங்கிட் மற்றும் பதக்கங்கள், மூன்றாவது பரிசு ஆயிரம் ரிங்கிட் மற்றும் பதக்கங்கள், நான்காவது பரிசு 500 ரிங்கிட் மற்றும் பதக்கங்கள் என வெற்றிப் பெற்றக் குழுக்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.

Related News