கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார்.
சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.