Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வங்காளதேசம் அசத்தல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து
விளையாட்டு

வங்காளதேசம் அசத்தல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து

Share:

நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.

ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே சவுத்தி விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் வங்களாதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Related News