Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய பேட்மிண்டன் சங்க முன்னாள் பயிற்சியாளர் வோங் தாட்டிற்கு விபத்து: ஆஸ்திரேலியாவில் தீவிர சிகிச்சை!
விளையாட்டு

மலேசிய பேட்மிண்டன் சங்க முன்னாள் பயிற்சியாளர் வோங் தாட்டிற்கு விபத்து: ஆஸ்திரேலியாவில் தீவிர சிகிச்சை!

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.11-

மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் முன்னாள் ஒற்றையர் பிரிவுப் பயிற்சியாளர் வோங் தாட் மெங் ஆஸ்திரேலியாவில் விபத்து ஒன்றில் சிக்கி தற்போது உயிருக்குப் போராடி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, ஆஸ்திரேலியா சிட்னி நகரில், இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக் கொண்டு மோதிக் கொண்ட விபத்தில், வோங் தாட் மெங் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகினார்.

இந்நிலையில், நியூ சௌத் வேல்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வோங் தாட் மெங்கிற்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசிய விளையாட்டு வீரர் லீ ஸீ ஜியா வெண்கலப் பதக்கம் வெல்ல வோங் தாட் மெங் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News