Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சீன பொது பூப்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் ஜூன் ஹாவோ
விளையாட்டு

சீன பொது பூப்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் ஜூன் ஹாவோ

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

தேசிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரர் லியோங் ஜுன் ஹாவோ, சீன பொது பூப்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் அச்சுற்றில், உலகின் முதல் நிலை வீரரான தாய்லாந்தின் குன்லாவுட் விட்டிட்சார்னைச் சந்திக்கவிருக்கிறார்.

தற்போது உலக தரவரிசையில் 26வது இடத்தில் உள்ள ஜுன் ஹாவோ, முதல் சுற்றில் ஜப்பானிய வீரர் கென்டா நிஷிமோட்டோவை 45 நிமிடங்களில் 21-15, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். கடந்த மார்ச் மாதம் சுவிஸ் பொது பூப்பந்து போட்டியின் கடைசி ஆட்டத்தில் நிஷிமோட்டோவிடம் தோல்வியுற்ற அவர், அதற்குப் பழி தீர்த்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு, பிரென்சின் டோமா ஜூனியர் போபோவிடம் தோல்வியடைந்த ஜூன் ஹாவோ, சீன பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றுடன் வெளியேறினார். கடந்த வாரம் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றிலும் அவர் வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும், வரும் வியாழக்கிழமை இரண்டாவது சுற்றில் உலக சாம்பியனும், முதல் நிலை வீரருமான குன்லாவுட்டை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள ஜுன் ஹாவோவுக்கு ஒரு கடினமானச் சோதனை காத்திருக்கிறது.


Related News