இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.
டிசம்பர் 10-ம் தேதி டி20 தொடர் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் டிசம்பர் 17-ம் தேதியம், டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதியம் துவங்குகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.