இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.
'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி குழுமியிருந்த 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மாவும் (26 ரன்), துணை கேப்டன்
ஸ்மிர்தி மந்தனாவும் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.