இந்தியா, செப்டம்பர்.04-
இந்தியா, பீஹாரில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சீனாவுடனான ஆட்டமொன்றில் மலேசியா அவ்வணியை 2க்கு 0 என்ற கோல்களில் வீழ்த்தியது.
தேசிய அணியின் முதலாவது கோல் ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் போடப்பட்டது. அடுத்த இரு நிமிடங்களில் இரண்டாவது கோல் புகுத்தப்பட்டது.
அபார ஆட்டத்தால் வெற்றியடைந்த மலேசியா புள்ளிப் பட்டியலில் B பிரிவில் முதலிடத்தில் உள்ளது.